விளையாட்டு

106 ரன்களில் பங்களாதேஷ் ஆல் அவுட் - இந்தியா அபார பந்துவீச்சு

webteam

இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி 106 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இந்தியா-பங்களாதேஷ் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. பகலிரவாக நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் ஆரம்பம் முதலே விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. இஷாந்த் ஷர்மா மற்றும் உமேஷ் யாதவ் வேகப்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாத பங்களாதேஷ் அணி 38 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

இதைத்தொடர்ந்தும் விக்கெட்டுகள் சரிய 30.3 ஓவர்களில் 106 ரன்கள் மட்டுமே எடுத்து பங்களாதேஷ் அணி ஆல் அவுட் ஆகியுள்ளது. அந்த அணியில் ஒரு வீரர் கூட 30 ரன்களை எட்டவில்லை. இந்திய அணியில் அபாரமாக பந்துவீசிய இஷாந்த் ஷர்மா 5 விக்கெட்டுகளை சாய்த்தார். உமேஷ் யாதவ் 3 மற்றும் முகமது ஷமி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து இந்திய அணி பேட்டிங்கை தொடங்கவுள்ளது.