விளையாட்டு

டாஸ் வென்றது பங்களாதேஷ் - இந்தியா முதல் பேட்டிங்

டாஸ் வென்றது பங்களாதேஷ் - இந்தியா முதல் பேட்டிங்

webteam

இந்தியாவிற்கு எதிரான முதல் டி20 போட்டியில் பங்களாதேஷ் அணி டாஸ் வென்றது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ளது. இந்தப் பயணத்தில் 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவுடன் அந்த அணி விளையாடவுள்ளது. இதில் முதல் டி20 போட்டி இன்று டெல்லி உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்றுள்ள பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது. இந்திய அணியில் மணிஷ் பாண்டே, ஷர்குல் தகூர், ராகுல் சாஹர், சஞ்சு சாம்சன் ஆகியோர் இடம்பெறவில்லை.