விளையாட்டு

ஜடேஜாவின் ஆல்ரவுண்ட் சாதனை

ஜடேஜாவின் ஆல்ரவுண்ட் சாதனை

webteam

டெஸ்ட் போட்டிகளின் ஒரே சீசனில் 500 ரன்கள் மற்றும் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய மூன்றாவது ஆல்ரவுண்டர் என்ற பெருமையை இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா பெற்றார்.

நடப்பு சீசனில் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரவீந்திர ஜடேஜா, 509 ரன்கள் மற்றும் 68 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். ஜடேஜாவுக்கு முன்னர் இதேசாதனையை கடந்த 1979-80 சீசனில் இந்தியாவின் கபில்தேவும், 2008-09 சீசனில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஜான்சனும் நிகழ்த்தியுள்ளனர். ஆஸ்திரேலிய அணிக்கெதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாள் முடிவில் 16 ரன்களுடன் ஜடேஜா ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கிறார்.