விளையாட்டு

3ஆவது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் முன்னிலை

3ஆவது டெஸ்ட் போட்டி: ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் முன்னிலை

webteam

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட்டு இழப்புக்கு 103 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

சிட்னியில் நடைபெற்று வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்கிஸில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதைத்தொடர்ந்து, விளையாடிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இளம் விரர் சுப்மன் கில் மற்றும் புஜாரா அரை சதத்தை கடந்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், ஹேசில்வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலிய அணி தொடக்க ஆட்டக்காரர்களான வார்னர் மற்றும் புகோவ்ஸ்கி விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்துள்ளது. ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டு இழப்பிற்கு 103 ரன்களை சேர்த்த ஆஸ்திரேலிய அணி 197 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக போட்டியின் போது இந்திய வீரர்கள் ரிஷப் பந்த் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயமடைந்தனர். பேட்டிங்கின் போது பந்து தாக்கியதில் ரிஷப் பந்தின் இடது கையில் காயம் ஏற்பட்டது, அதன் காரணமாக அவருக்கு ஸ்கேன் செய்யப்பட்டுள்ளதாகவும், அவருக்கு பதில் சஹா கீப்பிங் செய்வார் என கூறப்பட்டுள்ளது. ஜடேஜாவிற்கு பதிலாக மயங்க் அகர்வால் பீல்டிங் செய்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது