விளையாட்டு

சிட்னி போட்டி மழையால் தற்காலிக நிறுத்தம் - 2 நாட்களுக்கு மழை இருக்குமென பிரதீப் ஜான் தகவல்

rajakannan

இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி மழையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சிட்னியில் தொடங்கிய 3ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்-ஐ தேர்வு செய்தது. இதனையடுத்து, தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் -வில் புகோவ்ஸ்கி ஜோடி களமிறங்கியது.

காயத்திற்கு பின் அணிக்கு திரும்பிய வார்னர் 5 ரன்களில் முகமது சிராஜ் பந்தில் விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி பாதிக்கப்பட்டுள்ளது.

A quick update from the umps on @FoxCricket - but the umbrella-less Blocker Wilson wasn't too keen to chat! #AUSvIND pic.twitter.com/MGJt56NpNk
— cricket.com.au (@cricketcomau) January 7, 2021

இதனிடையே, சிட்னியில் இரண்டு தினங்களுக்கு மழைக்கான வாய்ப்பு இருக்கும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய ட்விட்டரில், “சிட்னியின் தென்கிழக்கு பகுதியில் அதிக அளவில் மேகமூட்டங்கள் காணப்படுகின்றன. அதனால், லேசான மழைப்பு வாய்ப்புள்ளது. கனமழைக்கு வாய்ப்பில்லை. போட்டியின் முதல் இரண்டு நாட்கள் மழையால் பாதிக்கப்படும். மூன்றாவது நாளில் மழையின் தாக்கம் நின்று போட்டியில் பாதிப்பின்றி நடைபெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.