விளையாட்டு

இந்தியா VS பாகிஸ்தான் : டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பவுலிங் தேர்வு! ஆடும் லெவன் விவரம்!

EllusamyKarthik

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில் விளையாடுகின்றன. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த போட்டி துபாய் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம், பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

உலகக் கோப்பை தொடரை பொறுத்த வரையில் டி20 மற்றும் 50 ஓவர் என இதுவரை இரு அணிகளும் மோதி உள்ள அனைத்து போட்டிகளிலும் இந்தியா, பாகிஸ்தானை வென்றுள்ளது. 

ஆடும் லெவன் விவரம்... 

பாகிஸ்தான்!

பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), ஃபகார் ஜமான், முகமது ஹபீஸ், சோயிப் மாலிக், ஆசிப் அலி, இமாத் வாசிம், ஷதாப் கான், ஹசன் அலி, ஹாரிஸ் ரவுஃப், ஷஹீன் அஃப்ரிடி.

இந்தியா!

ரோகித் ஷர்மா, கே.எல். ராகுல், விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.