விளையாட்டு

இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்தியா !

இங்கிலாந்தில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் இந்தியா !

jagadeesh

2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கும் இந்திய அணி ஐந்து டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இருக்கிறது.

இதற்கான அட்டவணனையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி இங்கிலாந்து அணி இந்தியாவுடன் 5 டெஸ்ட்டுகளில் விளையாடவுள்ளது. 

நாட்டிங்கம்மில் ஆகஸ்ட் 4 அன்று தொடங்கும் டெஸ்ட் தொடர், செப்டம்பர் 14 இல் மான்செஸ்டரில் நிறைவடைகிறது. அத்துடன் இங்கிலாந்து அணி ஜூன் மாதம் இலங்கை அணியுடன் மூன்று ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. பிறகு ஜூலையில் பாகிஸ்தான் அணியுடன் தலா 3 ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதன்பிறகு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.

ஜூன் மாதம் இலங்கைக்கு எதிரான டி20 தொடரிலும், ஒரு டெஸ்டிலும் இங்கிலாந்து அணி விளையாடுகிறது. எனினும் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிச்சுற்று குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படாததால் அது தொடர்பான அட்டவணை தற்போது வெளியிடப்படவில்லை. அட்டவணையில் இடம்பெற்றுள்ள தொடர்களுக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.