உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நிச்சயமாக கோப்பையை வெல்லும் என கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின், ஜென் நெக்ஸ் பவுன்டேஷன் உடன் இணைந்து நடுத்தர மற்றும் ஏழை குழந்தைகளுக்கான கிரிக்கெட் பயிற்சி மையத்தை தொடங்கி உள்ளார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், அஷ்வின் பவுண்டேஷன் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் பின்னர் புதிய தலைமுறையிடம் பேசிய அவர், இந்திய வீரர் ஷிகர் தவான் விரைவில் குணமடைவார் என்றும், அனைத்தையும் தாண்டி இந்திய அணி உலகக்கோப்பையை வெல்லும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த உலக்கோப்பை தொடரில் இந்தியா இதுவரை இரண்டு போட்டியில் விளையாடி இரண்டிலும் வெற்றி கண்டுள்ளது. முதலில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்திய இந்தியா இரண்டாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதனிடையே ஆஸ்திரேலியா உடனான போட்டியின்போது ஷிகர் தவானுக்கு கை விரலில் காயம் ஏற்பட்டது. அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் தொடர் கண்காணிப்பில் உள்ளார்.