இங்கிலாந்து நாட்டில் சவுதாம்ப்டனில் ஜூன் மாதம் 18 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் பங்கேற்கும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டெஸ்ட் அணிக்கு விராட் கோலி கேப்டனாகவும், ரஹானே துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் முடிந்ததும் ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியே பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி விவரம்: ரோகித் சர்மா, சுப்மன் கில், மயாங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ஹனுமா விஹாரி, ரிஷப் பன்ட், அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஜஸ்ப்ரீத் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், ( கே.எல். ராகுல் மற்றும் சாஹா உடற்தகுதி அடிப்படையில் முடிவு)
கூடுதல் வீரர்கள்: அபிமன்யூ ஈஸ்வரன், பிரசித் கிருஷ்ணா, அவேஷ் கான், அர்சான் நக்வாஸ் வாலா.
போட்டிகள் விவரம்:
ஜூன் 18 முதல் 22 - நியூசிலாந்துடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி - சவுதாம்ப்டன்
ஆகஸ்ட் 4 முதல் 8 - இங்கிலாந்துடன் முதல் டெஸ்ட் - நாட்டிங்கம்
ஆகஸ்ட் 12 முதல் 16 - இங்கிலாந்துடன் 2 ஆவது டெஸ்ட் - லார்ட்ஸ், லண்டன்
ஆகஸ்ட் 25 முதல் 29 - இங்கிலாந்துடன் 3ஆவது டெஸ்ட் - லீட்ஸ்
செப்டம்பர் 2 முதல் 6 - இங்கிலாந்துடன் 4ஆவது டெஸ்ட் - ஓவல், லண்டன்
செப்டம்பர் 10 முதல் 14 - இங்கிலாந்துடன் 5ஆவது டெஸ்ட் - மான்சஸ்டர்