விளையாட்டு

தொடரை சமன் செய்யுமா இந்தியா?.. இங்கிலாந்து அணிக்கு 145 ரன்கள் இலக்கு

webteam

இங்கிலாந்து அணிக்கெதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.

தொடரை சமன் செய்ய வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கிய நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் இன்னிங்ஸை கேப்டன் விராத் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடங்கினர். தொடக்கத்தில் அதிரடி காட்டிய கோலி 21 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய சுரேஷ் ரெய்னா 7 ரன்களிலும், யுவராஜ் சிங் 4 ரன்களிலும் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராகுல் 71 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மனீஷ் பாண்டே 30 ரன்கள் எடுத்தார். இறுதி ஓவரில் தோனி, பாண்ட்யா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோர்டன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.