விளையாட்டு

சென்னையில் நாளை 2ஆவது டெஸ்ட் போட்டி: எப்படி இருக்கும் இந்திய அணி?

சென்னையில் நாளை 2ஆவது டெஸ்ட் போட்டி: எப்படி இருக்கும் இந்திய அணி?

jagadeesh

இங்கிலாந்து அணிக்கு எதிராக சென்னையில் நாளை நடைபெற இருக்கும் 2ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் யாரெல்லாம் இடும்பெறுவார்கள் என பார்க்கலாம்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 277 ரன்களில் தோல்வியடைந்தது. இந்நிலையில் நாளை இரண்டாவது போட்டி சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடவிருக்கும் 11 பேர் கொண்ட இந்திய அணி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியிருக்கிறது.

இந்திய அணியின் பேட்டிங் முதல் போட்டியில் மோசமாகவே இருந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் சுப்மன் கில், புஜாரா, பன்ட், கோலி, வாஷிங்டன் சுந்தர் மட்டுமே சிறப்பாக விளையாடினார்கள். இவர்கள் அனைவரும் இரண்டு இன்னிங்ஸில் ஒரு இன்னிங்ஸிலாவது அரை சதமடித்தார்கள். இதில் ரோகித் சர்மா, ரஹானே ஆகியோரின் இரண்டு இன்னிங்ஸிலுமே சிறப்பாக விளையாடாமல் சொதப்பினார்கள். இது இந்தியா தோல்வியடைய முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்தியாவின் பவுலிங் சிறப்பாக இருந்தாலும் அதில் அஸ்வினும் மிகச் சிறப்பாக பந்துவீசினார். வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ராவும், இஷாந்த் சர்மாவும் சிறப்பாகவே செயல்பட்டார்கள். ஆனால் ஷபாஸ் நதீமும், வாஷிங்டன் சுந்தர் பவுலிங்கில் சோபிக்கவில்லை. இது இந்தியாவுக்கு பெரும் பின்னடைவாக இருந்தது. இதனையடுத்து நாளையப் போட்டியில் ஷபாஸ் நதீமுக்கு பதிலாக குல்தீப் யாதவ் அல்லது அக்ஸர் படேல் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.

இந்தியா உத்தேச அணி:

ரோகித் சர்மா
சுப்மன் கில்
புஜாரா
விராட் கோலி
ரஹானே
ரிஷப் பன்ட்
வாஷிங்டன் சுந்தர்
ரவிசந்திரன் அஸ்வின்
குல்தீப் யாதவ்
இஷாந்த் சர்மா
பும்ரா