விளையாட்டு

இந்தியா - பாக். மோதும் உலகக் கோப்பை போட்டி: 48 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!

இந்தியா - பாக். மோதும் உலகக் கோப்பை போட்டி: 48 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்!

webteam

உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா -பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகள் 48 மணி நேரத்திற்குள் விற்பனையாகிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மே மாத இறுதியில் உலகக்கோப்பை போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி ஜூன் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கான டிக்கெட் 48 மணி நேரத்தில் விற்பனையாகியுள்ளது‌. கடந்த 2013 ஆம் ஆண்டில் இருந்து இந்தியா - பாகிஸ்தான் தொடர்கள் நடத்தப்படவில்லை. இருந்தாலும் ஆசியக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்ட தொடர்களில் இரு அணிகளும் பங்கேற்று விளையாடி வந்தன. 

இதற்கிடையே புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானை இந்தியா பலவழிகளில் புறக்கணித்து வருகிறது. அதன்படி பாகிஸ்தானுடன் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடக்கூடாது என்ற கோரிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில் தான் இந்தியா -பாகிஸ்தான் போட்டிக்கு இரண்டு நாட்களில் டிக்கெட் விற்று தீர்ந்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த உலகக்கோப்பை கிரிக்கெட் வணிக மேம்பாட்டு அதிகாரி ஒருவர், இந்தப்போட்டி நிச்சயம் மிகப்பெரியதாக இருக்கும். கடந்த வருடம் இந்தியா - இங்கிலாந்து போட்டிகள் நடந்த போதே மைதானம் ரசிகர்களால் நிரம்பியது. கடுமையான கோடையையும் பொருட்படுத்தாமல் ரசிகர்கள் ஆட்டத்தை பார்த்து ரசித்தனர். 

இந்த முறை அதைவிட கடுமையான கூட்டத்தை இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தின் போது பார்க்கலாம். அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இது மிகப்பெரிய ஆட்டமாக இருக்கும் என்று தெரிவித்தார்.