இந்தியா - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி வீரர்கள் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதால் அந்த அணியை மேத்யூ வேட் தலைமை தாங்கி வழிநடத்துகிறார்.
ஆஸ்திரேலியாவுக்காக கேப்டன் மேத்யூ வேடும், ஷர்ட்டும் இன்னிங்க்ஸை ஓப்பன் செய்தனர். வேட் பட்டாஸை வெடித்து இந்திய பந்து வீச்சை வெளுத்து கொண்டிருக்க 9 ரன்கள் எடுத்த நிலையில் நடராஜனின் பந்துவீச்சில் அவுட்டானார் ஷார்ட்.
தொடர்ந்து களம் இறங்கிய ஸ்மித், கேப்டன் வேடுடன் இணைந்து நிதானமாக விளையாடினார். அரை சதம் கடந்த நிலையில் கேட்ச் (ஆனால் மிஸ் ஆகிவிட்டது) குழப்பத்தினால் ரன் அவுட்டானார் வேட். தொடர்ந்து மேக்ஸ்வெல்லும், ஸ்மித்தும் 45 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மேக்ஸ்வெல் 22 ரன்களில் வெளியேற ஹென்ரிக்ஸும், ஸ்மித்தும் 48 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஸ்மித் 46 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து ஹென்ரிக்ஸும் 26 ரன்களுக்கு நடராஜனின் வேகத்தில் வீழ்ந்தார். இருபது ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.
இந்தியா 195 ரன்கள் என்ற இலக்கை விரட்டி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த நடராஜன் 4 ஓவர் வீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.