விளையாட்டு

அஸ்வின் அசத்தல் பந்துவீச்சு - இந்திய அணிக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

EllusamyKarthik

இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் டி20 போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 153 ரன்களை எடுத்தது. 

அந்த அணிக்காக தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கப்டில் மற்றும் மிட்செல் 48 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்க கொடுத்தனர். கப்டில் 15 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார். அவர் அவுட்டானதும் அந்த அணியின் ரன் குவிப்பு வேகமமும் மந்தமானது. 

முதல் 5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்களை எடுத்த அந்த அணி, அதற்கடுத்த 15 ஓவர்களில் வெறும் 97 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. 

மார்க் சேப்மேன், மிட்செல், டிம் செய்ஃபெர்ட், பிலிப்ஸ், நீஷம் என நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுகளை இழந்தனர். இந்திய அணிக்காக பந்து வீசிய அனைத்து பவுலர்களும் குறைந்தபட்சம் ஒரு விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர். இதில் அறிமுக வீரர் ஹர்ஷல் பட்டேல் மட்டும் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். 

இந்திய அணி 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மூன்று போட்டிகள் அடங்கிய இந்த டி20 தொடரை இந்தியா வெல்லும்.