விளையாட்டு

சாத்தியப்படுமா இந்தியாவின் வெற்றி? பரபரப்பான கட்டத்தில் கடைசி டெஸ்ட்!

சாத்தியப்படுமா இந்தியாவின் வெற்றி? பரபரப்பான கட்டத்தில் கடைசி டெஸ்ட்!

jagadeesh

காபாவில் நடைபெற்று வரும் கடைசி டெஸ்ட் போட்டியின் 5ஆவது நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை எடுத்துள்ளது.

கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றிப்பெற்று தொடரையும் கைப்பற்ற இந்தியாவுக்கு இன்னும் 37 ஓவரில் 145 ரன்களை எடுக்க வேண்டும் என்ற நிலையில் இந்தப் போட்டி பரபரப்பான இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றைய நான்காம் நாள் ஆட்டத்தின் 4 ரன்களுடன் இன்று 5 ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினார்கள் இந்திய பேட்ஸ்மேன்கள். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 7 ரன்களில் அவுட்டானார்.

ஆனால் இதனையடுத்து களமிறங்கிய புஜாரா ஆஸி பவுலர்களின் பந்துவீச்சை பெரிதும் சோதித்தார். ஆனால் மறுமுனையில் சீரான வேகத்தில் ரன்களை சேர்த்த சுப்மன் கில் 91 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கடுத்து களமிறங்கிய கேப்டன் ரஹானே அதிரடியாக விளையாடினாலும் 22 ரன்களில் அவுட்டானார். இதனையடுத்து தேநீர் இடைவேளை வரை இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்களை எடுத்துள்ளது.

இந்திய அணி வெற்றிப்பெற இன்னும் 145 ரன்கள் தேவையாக இருக்கிறது. அதிரடியாக ஆடினால் மட்டுமே வெற்றிப்பெற முடியும் என்ற நிலையில் ரிஷப் பன்ட் களமிறக்கப்பட்டிருக்கிறார். இந்தியா வெற்றிப்பெறுமா அல்லது விக்கெட்டுகளை இழக்காமல் போட்டியை டிரா செய்யுமா என்பதே ரசிகர்களின் எதிர்பாரப்பாக இருக்கிறது.