விளையாட்டு

“தோற்காமல் வலம் வரும் இந்தியா” - புள்ளிகள் பட்டியலில் 2வது இடம்

“தோற்காமல் வலம் வரும் இந்தியா” - புள்ளிகள் பட்டியலில் 2வது இடம்

webteam

உலகக் கோப்பை தொடரில் இதுவரை தோற்காமல் வலம் வரும் ஒரே அணியாக இந்திய திகழ்கிறது.

உலகக் கோப்பை தொடரின் 34வது லீக் போட்டி இன்று இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதல் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 268 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் கேப்டன் கோலி 72 (82), தோனி 56 (61), கே.எல்.ராகுல் 48 (64) மற்றும் ஹர்திக் பாண்ட்யா 46 (38) ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேமர் ரோச் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 

இதையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 143 ரன்களில் ஆல் அவுட் ஆகியது. இதனால் 125 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் இந்திய அணி 11 புள்ளிகளை பெற்று புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. 

இதில் தனிச்சிறப்பு என்னவென்றால், இதுவரை 6 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 5 போட்டிகளில் வென்றுள்ளது. மற்ற ஒரு போட்டி மழையால் ரத்தாகிவிட்டது. இதனால் இதுவரை உலகக் கோப்பையில் தோல்வியை சந்திக்காத ஒரே அணி என்ற பெருமையுடன் இந்தியா வலம் வருகிறது.