விளையாட்டு

'இந்தியா நல்ல டீம்தான் ஆனா நாங்கதான் கெத்து' ஆஸி கேப்டன்

'இந்தியா நல்ல டீம்தான் ஆனா நாங்கதான் கெத்து' ஆஸி கேப்டன்

webteam

விராத் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடுகிறது. முதலில் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டி20 போட்டி நாளை நடக்கிறது. விராத் கோலி தலைமையிலான இந்திய அணி, ஆரோன் பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியை நாளை எதிர்கொள்கிறது. இதற்கான 12 பேர் கொண்ட இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.

அதில் விராத் கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், குணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர்குமார், பும்ரா, கலீல் அகமது, சேஹல். இந்த தொடரைத் தொடர்ந்து, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் மூன்று ஒரு நாள் போட்டித் தொடரிலும் இந்திய அணி பங்கேற்கிறது.

இந்நிலையில் இந்தியாவுடனான தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் செய்தியாளர்களிடம் பேசினனார் அதில் "அண்மையில் ஐக்கிய அரபு நாடுகளில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிராக நாங்கள் தோல்வி அடைந்தோம். ஆனால் டி20 போட்டிகளில் நாங்கள் சிறந்த அணி. ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்ற முத்தரப்பு  தொடர்களிலும் சிறப்பாக விளையாடி வெற்றிப் பெற்றோம். எனவே நாங்கள் நிச்சயமாக வெற்றிப் பெறுவோம் என உறுதியாக இருக்கிறோம்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் "இந்தியா மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் ரொம்ப காலமாகவே சிறப்பாக விளையாடி வருகிறது. அதனால் இந்தியாவுடனான எங்கள் அணி முழு பலத்துடன் ஆக்ரோஷத்துடனேயே விளையாடும். எனவே இந்திய அணியால் எங்களை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது. ஏனென்றால் டி20 போட்டிகளில் நாங்கள் பலமானவர்கள்" என்று கூறியுள்ளார் ஆரோன் ஃபின்ச்.