இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் பொறுப்பு கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் ஆடும் லெவனில், கடந்த சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த போட்டியில் சேர்க்கப்பட்ட தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் உடல் நிலை சரியில்லாததால் தேர்வு செய்யப்படவில்லை. இலங்கை அணியில் திரிமன்னேவுக்கு பதில் சமரவிக்ரமா சேர்க்கப்பட்டார்.
இதையடுத்து இலங்கை அணியின் தாரங்காவும் குணதிலகாவும் களமிறங்கினர். நான்காவது ஓவரை வீசிய பும்ரா, குணதிலகாவின் விக்கெட்டை கபளீகரம் செய்தார். இருந்தாலும் இலங்கை அணி அடித்து ஆடி வருகிறது.8 ஓவர் முடிவில் இலங்கை அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.