விளையாட்டு

டெய்லர், லாதம் சதம்: 343 ரன்கள் குவித்தது நியூசி.!

webteam

இந்திய கிரிக்கெட் வாரிய லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி, 343 ரன்கள் குவித்தது. 

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி 20 போட்டிகளில் பங்கேற்கிறது. முதலாவது ஒரு நாள் போட்டி, வரும் 22 ஆம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது. முன்னதாக, நியூசிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிரான இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்து தோற்றது. இரண்டாவது பயிற்சி ஆட்டம் இன்று நடந்துவருகிறது. மும்பையில் நடக்கும் இந்தப் போட்டியில் நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தொடங்கியது. அந்த அணியின் ராஸ் டெய்லரும் (102 ரன்கள்) லாதமும் (108) சதமடித்தனர். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் நியூசிலாந்து அணி, 8 விக்கெட் இழப்புக்கு 343 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் உனட்கட் 4 விக்கெட்டை வீழ்த்தினார்.