தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இந்திய ஏ அணி சாம்பியன் பட்டம் வென்றது. தென்னாப்பிரிக்கா அணியுடனான இறுதியாட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கோப்பையை கைப்பற்றியது.
பிரிட்டோரியாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்தது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய ஃபர்ஹான் பெஹர்தீன் 101 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஷர்துல் தாகூர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 268 ரன்கள் என்ற வெற்றி இலக்கை, இந்திய அணி 47-வது ஓவரில் எட்டியது. சிறப்பாக விளையாடி சதம் விளாசிய ஸ்ரோயஸ் ஐயர், 131 பந்துகளில் 140 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விஜய் ஷங்கர் 72 ரன்களும், மணீஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் 32 ரன்களும் எடுத்தனர்.