விளையாட்டு

கண் கூசிய சூரிய வெளிச்சம் ! பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியா - நியூசி. போட்டி !

கண் கூசிய சூரிய வெளிச்சம் ! பாதியில் நிறுத்தப்பட்ட இந்தியா - நியூசி. போட்டி !

Rasus

பேட்ஸ்மேனின் கண்கள் கூசும் அளவிற்கு சூரிய வெளிச்சம் விழுந்ததால் இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்தியா நியூசிலாந்து இடையிலான முதல்ஒருநாள் போட்டி நியூசிலாந்தின் நேப்பியரில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் எடுத்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். நியூசிலாந்து அணியில் அதிகப்பட்சமாக கேன் வில்லியம்சன் 64 ரன்கள் எடுத்தார்.

இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் ரோகிஷ் ஷர்மா வெறும் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் குப்திலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனையத்து ஷிகர் தவானுடன் விராட் கோலி கைகோர்த்தார். 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 44 ரன்கள் எடுத்திருந்தது.

அந்த நேரத்தில் பேட்ஸ்மேனின் கண்கள் கூசும் அளவிற்கு சூரிய வெளிச்சம் விழுந்தது. அதாவது சூரியன், பேட்ஸ்மேனின் வலது பக்கம் இருப்பதால், எதிர்வரும் பந்துகளை பேட்ஸ்மேன்களால் கணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனைடுத்து இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டி சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. வழக்கமாக இதேபோன்ற சூழ்நிலையை தவிர்க்க கிரிக்கெட் மைதனாங்கள் வடக்கு- தெற்கு திசையில் இருக்கும். ஆனால் நேப்பியரில் உள்ள கிரிக்கெட் மைதனாம் கிழக்கு- மேற்கு திசையில் இருப்பதால் சூரியன் வெளிச்சம் நேரடியாக பேட்ஸ்மேன்கள் கண்களை வந்து தாக்கும் நிலை உருவானது. இதனையடுத்து சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்ட போட்டி மீண்டும் துவங்கியுள்ளது. தற்போது போட்டி 49 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வெற்றி இலக்கும்  156 ஆக குறைக்கப்பட்டுள்ளது.