விளையாட்டு

நியூசி-க்கு எதிரான போட்டியில் இந்தியா பந்துவீச்சு - இறுதிக்கு முன்னேறுமா?

நியூசி-க்கு எதிரான போட்டியில் இந்தியா பந்துவீச்சு - இறுதிக்கு முன்னேறுமா?

webteam

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. முதல் சுற்று போட்டி‌கள் முடிவடைந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மான்செஸ்டர் நகரில் ஓல்டு டிராஃபோர்ட் மைதானத்தில் இன்று மோதுகின்றன. 

நடப்புத் தொடரில் இந்திய அணி விளையாடிய 9 போட்டிகளில் 8 போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் மட்டுமே வெற்றி வாய்ப்பை இழந்தது. 15 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது. தொடக்க வீரர் ரோகித் சர்மா தொடர்ந்து அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார். தொடரில் அவர் ஐந்து சதம் அடித்து இந்திய அணியின் பேட்டிங்கிற்கு முதுகெலும்பாக விளங்கி வருகிறார். இன்றைய போட்டியிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தாமல் உள்ளனர். பந்துவீச்சில், இந்தியா பலமான அணியாக விளங்குகிறது. குறிப்பாக பும்ரா, ஷமி ஆகியோர் தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசி வருவது இந்திய அணிக்கு பலம்.

நியூசிலாந்து அணியும் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவானதாக விளங்குகிறது. பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன் அணியை தாங்கி வருகிறார். அனுபவ வீரர் ராஸ் டெய்லர் மற்றும் நீசம் ஆகியோர் பேட்டிங்கில் கைக்கொடுத்து வருவது கூடுதல் சிறப்பு. பந்துவீச்சில் போல்ட், ஃபெர்குசன், நீசம், ஹென்றி ஆகியோர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்கள்.

பலமான இரு அணிகள் உலகக்கோப்பையின் முக்கிய தருணத்தில் மோதும் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 இந்நிலையில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் குல்தீப்பிற்கு பதிலாக சாஹல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.