விளையாட்டு

ஹர்திக்கின் கடைசிநேர அதிரடியில் தப்பிய இந்திய அணி.. ஆனால் இதனை மட்டும் மறந்துவிடக்கூடாது!

ஹர்திக்கின் கடைசிநேர அதிரடியில் தப்பிய இந்திய அணி.. ஆனால் இதனை மட்டும் மறந்துவிடக்கூடாது!

Rishan Vengai

2022 டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 169 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

உலக கிரிக்கெட் ரசிகர்களின் கோலாகலத்துடன் தொடங்கப்பட்ட 2022 டி20 உலகக்கோப்பை தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பல சுவாரசியங்களுடன் நடைபெற்ற முதல் அரையிறுதிப்போட்டியில் பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக விளையாடி நியூசிலாந்து அணியை எளிதாக வெற்றி பெற்று முதல் அணியாக இறுதி போட்டிக்குள் நுழைந்தது பாகிஸ்தான் அணி. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்று இந்தியா பாகிஸ்தான் அணிகள் இறுதி போட்டியில் சந்திக்கும் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி பல கிரிக்கெட் வீரர்களுக்குமிடையே எழுந்துள்ளது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு தேர்வு!

இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று தொடங்கி நடைபெற்றுவருகிறது இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப்போட்டி. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் பட்லர் இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு அழைத்தார்.

மீண்டும் ஒருமுறை சொதப்பிய கே.எல்.ராகும்.. திணறிய ரோகித்

இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்யவந்த இந்திய அணிக்கு எதிராக சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியது இங்கிலாந்து அணி. இந்திய அணியின் ஓப்பனர் கேஎல் ராகுல் எப்போதும் போல நாக்அவுட் போட்டியான இந்த போட்டியிலும் 5 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பெரிதாக கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பந்து பேட்டில் படாததால் பவுண்டரிகள், சிக்சர்கள் அடிக்க முயன்ற அவரது முயற்சி 27 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது.

பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் பெரிதான எதிர்பார்ப்புகளுக்கிடையே ஒரு சிக்சர், பவுண்டரி என அடித்து அதில் ரசித் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் களமிறங்கிய ஹர்திக் பாண்டியா மற்றும் விராட் கோலி இருவரும் அணியை சரிவிலிருந்து மீட்க போராடினர். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 பவுண்டரிகள், 1 சிக்சர் விளாசி அரைசதம் அடித்து அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என அடுத்தடுத்து பறக்க விட்டு 63 ரன்கள் சேர்க்க 20 ஓவர் முடிவில் இந்திய அணி 168 ரன்கள் சேர்த்தது.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கோடு இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கி ஆடவிருக்கிறது இங்கிலாந்து அணி.

பார் ஸ்கோர் தான்!

அடிலெய்டு மைதானத்தில் 160 ரன்கள் என்பது பார் ஸ்கோர்தான். மைதானம் ஓரளவுக்கு சிறியதுதான். சிக்ஸர், பவுண்டரிகளை எளிதில் வீழ்த்த முடியும். இங்கிலாந்து அணியில் பட்லர் போன்ற அதிரடி வீரர்கள் இருக்கிறார்கள். ஏன் சாம் கர்ரன் வரை ஹிட்டர்கள் உள்ளனர். அதனால், பந்துவீச்சில் இந்திய அணிக்கு சவால் இருக்கும். 

முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகள்

புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரிலேயே பட்லர் 3 பவுண்டரிகள் விளாசினார்.