இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்டின் சாதனையை விராத் கோலி முறியடித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது, இந்திய கிரிக்கெட் அணி. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-1 என சமநிலையில் இருக்கும் இரு அணிகளும் இப்போது 3-வது டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றன. இந்தப் போட்டி மெல்போர்னில் நேற்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாளும் ஆதிக்கம் செலுத்தியது.
இந்திய அணியில் அறிமுக வீரராக களமிறங்கிய மயங்க் அகர்வால் 76 ரன்னும் புஜாரா 106 ரன்னும் எடுத்தனர். இந்தப் போட்டியிலும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் விராத் கோலி 82 ரன்னில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா 63 ரன்கள் எடுத்தார். பின்னர் 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்யப்பட்டது.
இந்தப் போட்டியில், இந்திய அணி கேப்டன் விராத் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். அவர் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித் துள்ளார். வெளிநாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டியில், ஒரு காலண்டர் வருடத்தில் ராகுல் டிராவிட் 2002-ம் ஆண்டு 1,137 ரன்கள் சேர்த்ததே சாதனையாக இருந்து வந்தது. அதை முறியடித்துள்ள கோலி 1,138 ரன்கள் சேர்த்து. ஒரு வருடத்தில் வெளி நாடுகளில் அதிக ரன் சேர்த்த இந்திய வீரர் என்னும் பெருமை பெற்றுள்ளார்.