விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணம்

webteam

2018ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப் பயணம் செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இலங்கை எதிரான தொடர்களில் அனைத்து போட்டிகளிலுமே வெற்றி பெற்று இந்தியா சாதனை படைத்தது. தற்போது ஆஸ்திரேலியாவுடன் 5 ஒருநாள் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், மீதமுள்ள 4 போட்டிகளில் விளையாடவுள்ளது. இதைத்தொடர்ந்து 3 டி20 போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இதையடுத்து நியூலாந்திற்கு எதிரான தொடரில் இந்தியா விளையாடவுள்ளது. 

இந்நிலையில் அடுத்தாண்டு தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை அடுத்த சில தினங்களில் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் வெளியிடும் என்றும், 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.