விளையாட்டு

தாஹிரின் ஓட்டத்தை கலாய்த்து வைரலாகும் வீடியோ 

தாஹிரின் ஓட்டத்தை கலாய்த்து வைரலாகும் வீடியோ 

webteam

இம்ரான் தாஹிரின் ஓட்டத்தை கலாய்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தென் ஆப்பிரிக்கா அணியின் இம்ரான் தாஹிர் விளையாடினர். அப்போது இவர் விக்கெட் எடுத்துவிட்டு ஓடுவதை வைத்து இவருக்கு சென்னை அணியினர் ‘பராசக்தி எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் வைத்தனர். எப்போதும் விக்கெட் வீழ்த்திய பிறகு சிறிய தூரம் ஓடி இம்ரான் தாஹிர் அதனைக் கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் நடப்பு உலகக் கோப்பையிலும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் விக்கெட் எடுத்த மகிழ்ச்சியில் இம்ரான் தாஹிர் ஓடுகிறார்.  

இதனை பாகிஸ்தான் நாட்டு விளையாட்டு தொகுப்பாளர் ஒருவர் கலாய்த்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் இம்ரான் தாஹிர் உலக முழுவதும் ஓடுவது போல் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது. இவரின் இந்த வீடியோவிற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பதிலாக மற்றொரு ட்வீட்டை செய்துள்ளது. 

அதில், “ஓடினேன் ஓடினேன்! பராசக்தி எக்ஸ்பிரஸ்” என்று இம்ரான் தாஹிரை டெக் செய்து ஒரு வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ட்வீட் செய்துள்ளது. இந்த வீடியோவில் பராசக்தி படத்தில் சிவாஜி கூறும் ‘ஓடினேன் ஓடினேன் வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினேன்’ என்ற வசனம் இடம் பெறும் காட்சி அமைந்துள்ளது.