விளையாட்டு

கபில்தேவ் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்!

கபில்தேவ் சாதனையை முறியடித்த பாகிஸ்தான் வீரர்!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவின் சாதனையை, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக் முறியடித்துள்ளார்.

1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிராக 175 ரன் குவித்து இந்திய அணியை கபில்தேவ் வெற்றி பெற வைத்த சம்பவம் எளிதில் மறக்க முடியாதது. 9 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறிக் கொண்டிருந்த போது, களமிறங்கிய கபில்தேவ் இந்த ரன்களை விளாசி வியக்க வைத்தார் அனைவரையும்.

அந்த விளாசலில் ஈடுபட்டபோது கபில்தேவின் வயது 24! இதன் மூலம் குறைந்த வயதில் இங்கிலாந்தில் 150-க்கும் அதிகமான ரன் அடித்த வீரர் கள் பட்டியலில் இணைந்திருந்தார் கபில். அவரது சாதனையை இப்போது முறியடித்திருக்கிறார், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடி வருகிறது. நேற்று முன் தினம் நடந்த போட்டியில், பாகிஸ் தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் 131 பந்துகளில் 151 ரன் விளாசினார். இமாமுக்கு வயது 23. இதையடுத்து இளம் வயதில் இங்கிலாந்தில் 150-க்கும் அதிகமான ரன்களை விளாசியவர்கள் பட்டியலில் கபில்தேவை பின்னுக்குத் தள்ளி முன்னேறியிருக்கிறார் இமாம்.

இருந்தாலும் இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி பரிதாபமாகத் தோற்றது.