மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி. டெஸ்ட், ஒருநாள், டி20 என ரன் மழை பொழிவது கோலியின் பாணி. இருப்பினும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் தொடர்களில் அவரது தலைமையிலான இந்திய அணி ஒரு கோப்பையை கூட வெல்லாமல் உள்ளது.
இந்நிலையில் அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை என சொல்லியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.
“இந்திய கேப்டன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரிய ஆட்டக்காரர். அவர் படைத்து வரும் சாதனைகளுக்கு எல்லையே கிடையாது. எனக்கு தெரிந்து அவர் உலக கோப்பையை வென்ற கேப்டன் என்ற சாதனையுடன் தான் விடை பெறுவார் என நினைக்கிறேன். அவரது தலைமையிலான இந்திய அணி நிச்சயம் 2021 டி20 உலக கோப்பையை வெல்லும். அது கோலி படைத்துள்ள புகழுக்கு எல்லாம் புகழ் சேர்க்கும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை” என ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
2017 சாமியன்ஸ் டிராபி பைனல் மற்றும் 2019 உலக கோப்பை அரையிறுதி போட்டிகளில் கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.