சேவாக் தலைமையிலான அணியுடன் அஃப்ரிடி தலைமையிலான அணி மோதவுள்ளது.
உலக கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் ஐஸ் கிரிக்கெட் சேலஞ்ச் போட்டிகள் சுவிட்சர்லாந்தில் வரும் 8 மற்றும் 9ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் இந்தியாவின் அதிரடி நாயகன் சேவாக் தலைமையிலான டைமண்ட்ஸ் அணியை, பாகிஸ்தான் அதிரடி மன்னன் ஷாகித் அப்ரிதி தலைமையிலான அணி எதிர்கொள்கிறது. டி20 போட்டியாக நடைபெறவுள்ள இதில் உலகின் சிறந்த வீரர்கள் பலரும் பங்கேற்கின்றனர்.
டைமண்ட்ஸ் அணியில் வீரேந்தர் சேவாக்(கே), தில்சான்(இலங்), ஜெயவர்தனே (இலங்), மைக் ஹஸ்ஸி (ஆஸி), முகமது கைஃப்(இந்), ஆண்ட்ரிவ் சைமண்ட்ஸ்(ஆஸி), ஜொகிந்தர் சர்மா(இந்), அஜித் அகர்கர்(இந்), ரமேஸ் பவர்(இந்), ஜகீர் கான்(இந்), மலிங்கா(இலங்) உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
ராயல்ஸ் அணியில் ஷாகித் அப்ரிதி(கே), க்ரீம் ஸ்மித்(தெ.ஆ). ஜக்யூஸ் கல்லீஸ்(தெ.ஆ), ஓவைஸ் ஷா(இங்), எல்லியாட்(நிஸி), அப்துல் ராஸாக்(பாக்), ப்ரையார்(இங்), டேனியல் வெட்டோரி(நிஸி), நாதன் மெக்குல்லம்(நிஸி), சோயைப் அக்தர்(பாக்), பெனெசர்(இங்) ஆகியோர் உள்ளனர். இந்த இருஅணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ள போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.