வெஸ்ட் இண்டீஸ் - ஐசிசி உலக லெவன் அணிகளுக்கு இடையேயான ஒரேயொரு டி20 கிரிக்கெட் போட்டி இங்கிலான்தின் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதற்கான உலக லெவன் அணியின் கேப்டனாக பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிதி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு கேப்டனாக நியமிக்கப்பட்டிருந்த இங்கிலாந்தின் மோர்கன் காயமடைந்ததால், திடீரென அப்ரிதியை கேப்டனாக நியமித்துள்ளது ஐசிசி. மோர்கனுக்குப் பதிலாக சாம் பில்லிங்ஸ் உலக லெவன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவருடன் தைமல் மில்ஸ், சாம் குர்ரான் ஆகியோரும் உலக லெவன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்
முகமது ஷமி மற்றும் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் உலக லெவன் அணியில் இடம்பிடித்துள்ளனர்.
உலக லெவன் அணி விவரம்: ஷாகித் அப்ரிதி (பாகிஸ்தான், கேப்டன்), தினேஷ் கார்த்திக், முகமது ஷமி (இந்தியா), மிச்சைல் மெக்லிகன், லூக் ரோஞ்சி (நியூசிலாந்து), திசாரா பெரீரா (இலங்கை), ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்), ஷோயப் மாலிக் (பாகிஸ்தான்), தமிம் இக்பால் (வங்கதேசம்), சந்தீப் லாமிச்சனே (நேபாளம்), ஆதில் ரஷீத், சாம் பில்லிங், சாம் குர்ரான், தைமால் மில்ஸ் (இங்கிலாந்து).