விளையாட்டு

பீல்டிங் செய்த ‘தல’ தோனி - ரசிகர்கள் ஆரவாரம்

பீல்டிங் செய்த ‘தல’ தோனி - ரசிகர்கள் ஆரவாரம்

rajakannan

நியூசிலாந்து அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக் வசம் விக்கெட் கீப்பீங் பொறுப்பை கொடுத்துவிட்டு, மகேந்திர சிங் தோனி பீல்டிங் செய்தார்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடர் மே 31ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான பயிற்சி ஆட்டம் லண்டனில் நேற்று நடைபெற்றது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ரவீந்திர ஜடேஜா மட்டும் அரைசதம் அடித்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தோனி சற்று நேரம் தாக்குபிடித்து 17 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர், விளையாடிய நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

இந்திய அணி பீல்டிங் செய்த போது இடையில், தினேஷ் கார்த்திக் வசம் விக்கெட் கீப்பீங் பொறுப்பை கொடுத்துவிட்டு, மகேந்திர சிங் தோனி பீல்டிங் செய்தார். ஆடுகளத்தில் பவுண்டரி எல்லையில் அவர் பீல்டிங் செய்தார். மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவார முழக்கம் எழுப்பினர். தோனி.. தோனி.. என்ற சத்தம் மைதானத்தில் ஓங்கி ஒலித்தது. 

தோனி பீல்டிங் செய்த வீடியோ காட்சிகளை பலரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள். மேலும், தோனி தன்னுடைய காலினை மேலே உயர்த்தி பேட்டிங் செய்த ஒரு புகைப்படமும் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.