விளையாட்டு

“ஜெர்ஸி என்ன நிறம் என எங்களுக்கு தெரியாது” - பயிற்சியாளர் பாரத் அருண்

“ஜெர்ஸி என்ன நிறம் என எங்களுக்கு தெரியாது” - பயிற்சியாளர் பாரத் அருண்

rajakannan

ஜெர்ஸி வண்ணம் மீது கவனம் செலுத்த தேவையில்லை என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண் கூறியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நீல நிற வண்ணத்திலான ஜெர்ஸி உடன் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் ஒரே மாதிரியான நிறங்களைக் கொண்ட ஜெர்ஸி உடன் இரு அணிகள் விளையாடுவதை தவிர்க்கும் வகையில் புதிய திட்டத்தை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. 

அந்த வகையில், இங்கிலாந்து அணியுடன் ஜூன் 30 ஆம் தேதி விளையாடவுள்ள போட்டியில் இந்தியா ஆரஞ்சு நிற ஜெர்ஸி உடன் விளையாடவுள்ளது. ஆனால், ஆரஞ்சு நிறத்தில் ஜெர்ஸியை பாஜக திட்டமிட்டு தேர்வு செய்து காவிமயமாக்கம் செய்வதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. 

இந்நிலையில், ஜெர்ஸி நிறம் தொடர்பான சர்ச்சை குறித்து பேசிய பந்துவீச்சு பயிற்சியாளர் பாரத் அருண், நிறம் மீது கவனம் செலுத்த வேண்டாம் என்று கூறியுள்ளார். மேலும், “எந்த நிற ஜெர்ஸி அணிய போகிறோம் என்பது உண்மையில் எங்களுக்கு தெரியாது. நாளை நடைபெறும் போட்டி குறித்துதான் யோசித்துக் கொண்டிருக்கிறோம். போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துவோம். என்ன நிறம் என்பது எங்களுக்கு தெரியாது. நீல நிறம்தான் எங்களுக்கு முக்கியமானது” என்றார் அருண் பாரத்.