இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா, பூஜா வஸ்த்ரகர், சினே ராணா ஆகிய மூவரும் அரை சதங்கள் விளாசினர்.
நியூசிலாந்தில் நடைபெறும் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் இன்று பிஸ்மாக் மரூப் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் விளையாடி வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 244 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய பூஜா வஸ்த்ரகர் 67 ரன்களும், சினே ராணா 53 ரன்களும், ஸ்மிருதி மந்தனா 52 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிவரும் பாகிஸ்தான் அணி, 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் ஏதும் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்திருந்தது.
இதையும் படிக்க: "98ல நடந்ததா சொல்றாங்க சார்" சென்னையில் நடந்த ஷேன் வார்ன் Vs சச்சின்-ஒரு சுவாரஸ்ய பின்னணி