விளையாட்டு

ரோகித் ஷர்மாவை TROLL செய்த ஐசிசி? வெச்சு செய்த நெட்டிசன்கள்!

EllusamyKarthik

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தினந்தோறும் ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் வீரர்களின் தனிப்பட்ட சாதனைகள், பிறந்தநாள், மேட்ச் வின்னிங் இன்னிங்ஸ் மற்றும் ஒரு அணியின் அசத்தலான பர்பாமென்ஸை  பகிர்ந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும். ஆடவர், மகளிர் மற்றும் அண்டர் 19 கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அது தொடர்பாக ON THIS DAY, TODAY, QUIZ, RECAP, HAPPY BIRTHDAY என ஏதேனும் ஒரு நிகழ்வு குறித்து ஐசிசி ரகம் ரகமாக ட்வீட் போட்டு அசத்தும். 

இந்நிலையில் இன்று ஐசிசி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்திருந்தது. அந்த போட்டோவில் இந்திய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஸ்டெம்புகளோடு மோதி கீழே விழுவது போல இருந்தது. 

‘இவர் யார் என்று தெரிகிறதா?’ என கேட்டதோடு சர்வதேச கிரிக்கெட்டில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் எனவும் ஹிண்ட் கொடுத்து கேப்ஷனும் போட்டிருந்தது.

உடனடியாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அந்த வீரர் யார் என கணித்ததோடு. ‘இது இப்போது அவசியம் தானா?’ எனவும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

ஐசிசி பகிர்ந்த அந்த போட்டோவில் இருந்த வீரர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன் ரோகித் ஷர்மா என்பது தெரியவந்துள்ளது. 

கடந்த 2019 இல் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தது. அதில் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 289 ரன்களை இந்தியா சேஸ் செய்தது. 

தொடக்க வீரராக களம் இறங்கிய ரோகித் 129 பந்துகளில் 133 ரன்களை விளாசியிருப்பார். இருப்பினும் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அந்த போட்டியை வென்றது. ரன் எடுக்க ஓடிய போது ரோகித் ஷர்மா ஸ்டெம்பில் மோதி விழுந்தார். அப்போது கூட இது  சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் அடுத்த சில நாட்களில் விளையாட உள்ள நிலையில் ஐசிசி இதை பகிர்ந்துள்ளது. ரோகித் ஆஸ்திரேலிய தொடரில் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளார்.