ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகி வரும் கிரிக்கெட் மைதானத்தின் புகைப்படத்தை ஐசிசி பகிர்ந்துள்ளது
இந்தியாவை பொருத்தவரை கிரிக்கெட் என்பது முக்கியமான விளையாட்டு. சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை வயது வித்தியாசமின்றி கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் உண்டு. ரசிகர்களின் ஆதரவே ஐபிஎல் போன்ற புதிய போட்டிகள் தொடங்கப்படவும், அது வெற்றி அடையவும் காரணம். நாளுக்கு நாள் கிரிக்கெட் தொடர்பான விஷயங்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கின்றன. இந்நிலையில் உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் ஒன்று வேகமாக தயாராகி வருகிறது. அது தொடர்பான புகைப்படத்தையும் ஐசிசி வெளியிட்டுள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் உருவாகி வரும் ‘மொடரா’ கிரிக்கெட் மைதானம்தான் அது. ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய வகையில் உருவாகி வருகிறது இந்த மைதானம். தற்போது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள மைதானமே உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாகும். இங்கு ஒரு லட்சத்து 24 பேர் அமர்ந்து விளையாட்டை கண்டுரசிக்கலாம். ஆஸ்திரேலியாவின் மைதானத்தை பின்னுக்குத் தள்ளும் விதமாக அகமதாபாத் மைதானம் உருவாகி வருகிறது.
அதிநவீன மின் விளக்குகள், அதிக இடவசதி கொண்ட பார்க்கிங் வசதி என முற்றிலும் அதிநவீன சிறப்பம்சங்களுடன் இந்த மைதானம் உருவாகி வருகிறது.