விளையாட்டு

டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐசிசி: டாப் 10 பட்டியலில் இந்திய வீரர்கள் யார் யார்?

EllusamyKarthik

டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களில் சிறந்த பேட்டிங், பவுலிங் மற்றும் ஆல்-ரவுண்டர்களுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி). இந்த பட்டியலில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் வீரர்கள் அனைத்து பிரிவுகளிலும் டாப் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளனர். 

ஆல்-ரவுண்டர்களுக்கான பட்டியலில் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா முதலிடம் பிடித்துள்ளார். இவர் அண்மையில் முடிந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சதம் மற்றும் 9 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அதன் மூலம் அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். ஜேசன் ஹோல்டர், அஷ்வின், ஷகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ் ஆகிய வீரர்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். ஜடேஜா 2 இடங்கள் முன்னேறி முதலிடம் பிடித்துள்ளார். 

பேட்டிங்கில் இந்திய வீரர் விராட் கோலி 2 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடம் பிடித்துள்ளார். கேப்டன் ரோகித் ஷர்மா ஆறாவது இடத்திலும், ரிஷப் பண்ட் பத்தாவது இடத்திலும் உள்ளார். இதில் பண்ட் ஒரு இடம் முன்னேறியுள்ளார். 

பவுலிங்கில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் முதலிடத்திலும், இந்திய வீரர் அஷ்வின் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். பும்ரா பத்தாவது இடத்திலும் உள்ளார். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தான், இலங்கை, தென்னாப்பிரிக்கா, இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. இது ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திற்கு பிறகு வெளியிடப்பட்டதாகும்.