விளையாட்டு

டி20 உலகக் கோப்பை: இந்தியா முதலில் பேட்டிங்.. ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா?

டி20 உலகக் கோப்பை: இந்தியா முதலில் பேட்டிங்.. ஹாட்ரிக் வெற்றியை ருசிக்குமா?

JustinDurai

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்12 சுற்றில் இன்று இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. பெர்த் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் இறங்க முடிவெடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணியினர் பீல்டிங் செய்ய அணி தயாராகி வருகின்றனர்.

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானையும், அடுத்த ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தி 'குரூப் 2' பிரிவில் முதலிடத்தில் இருக்கிறது. 'ஹாட்ரிக்' வெற்றியை ருசித்து அரை இறுதி வாய்ப்பை நெருங்கும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்குகிறது.

தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க லீக் ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. அடுத்த ஆட்டத்தில் அந்த அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் வங்காள தேசத்தை தோற்கடித்தது. பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவாக இருக்கிறது. சமபலம் வாய்ந்த இந்த இரு அணிகளும் அரை இறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்தி கொள்ள கடுமையாக போராடும் என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.