விளையாட்டு

2023-ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: அட்டவணையை வெளியிட்டது ஐசிசி

jagadeesh

2023-ஆம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் போட்டிகளை விளையாடும் தகுதிப்பெற்ற நாடுகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை ஐசிசி 2019-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. அதன்படி 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா - நியூசிலாந்து அணிகள் தகுதிப் பெற்றன. இங்கிலாந்தின் சவுத்தாம்டன் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் நியூசிலாந்து வென்று சாம்பியனானது. இதனையடுத்து அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி 2023-இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து 2023 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் தகுதிப் பெற 9 நாடுகளுக்கான போட்டி அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி சொந்த மண்ணில் இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் மோதுகிறது. மேலும் வெளிநாட்டில் வங்கசேதம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளுடன் மோதுகிறது. இதுபோல மற்ற நாடுகளுக்கும் போட்டி அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது.

இதில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் 2023 இல் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாடும்.