விளையாட்டு

2021-இன் சிறந்த மகளிர் T20 அணியை அறிவித்தது ஐசிசி: இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவுக்கு இடம்!

EllusamyKarthik

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) கடந்த ஆண்டின் சிறந்த ஆடவர் டெஸ்ட், ஒருநாள், டி20 அணி மற்றும் மகளிர் ஒருநாள், டி20 அணி விவரங்களை அறிவித்துள்ளது. இதில் கடந்த ஆண்டு முழுவதும் சிறப்பான முறையில் கிரிக்கெட் விளையாடிய சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். 

ஐசிசி அறிவித்துள்ள 2021-இன் சிறந்த மகளிர் T20 அணியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சார்பில் ஸ்மிருதி மந்தனா மட்டுமே இடம் பிடித்துள்ளார். ஐசிசி-யின் சிறந்த மகளிர் ஒருநாள் அணியில் இந்தியாவின் மித்தாலி ராஜ் மற்றும் ஜுலான் கோஸ்வாமி இடம் பிடித்துள்ளனர். 

ஆடவர் கிரிக்கெட்டில் கடந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணிக்கான வீரர்களில் இந்தியா சார்பில் ரோகித் ஷர்மா, ரிஷப் பண்ட் மற்றும் அஷ்வின் இடம் பெற்றுள்ளனர். ஆடவர் பிரிவில் சிறந்த டி20 மற்றும் ஒருநாள் அணியில் இந்திய வீரர்கள் யாருமே இடம்பெறவில்லை.