கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் பதவி தேடி வந்தால் நிச்சயம் ஏற்றுக்கொள்வேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேட்டியளித்துள்ள அவர் "பாட் கம்மின்ஸ் எஞ்சிய போட்டிகளில் பங்கேற்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறது, பார்ப்போம். அதேபோல் கேப்டன் இயான் மோர்கன் பங்கேற்பதும் இன்னும் உறுதியாகவில்லை. இந்த சூழ்நிலையில் எனக்கு கேப்டன் பதவி தேடி வந்தால், நிச்சயம் ஏற்றுக்கொள்வேன்" என்றார்.
மேலும் பேசிய அவர் "டி20 உலகக்கோப்பை தொடரில் என்னால் பெஸ்ட் பினிஷராக செயல்பட முடியும். இந்திய டி20 அணியின் மிடில் வரிசையில் வெற்றிடம் உள்ளது. இதனை என்னால் நிரப்ப முடியும். மேலும் இப்போதுள்ள இந்திய அணிக்கு தேர்வாக வயது முக்கியமல்ல, உடற்தகுதியே பிரதானம். இன்னும் இந்திய அணிக்காக விளையாட நான் காத்துக்கொண்டு இருக்கிறேன்" என்றார்.
முன்னதாக கொரோனா சூழல் காரணமாக இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. பின்பு ஐபிஎல்லின் எஞ்சியப் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்தது. இதனையடுத்து வரும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெறும் என தெரிகிறது.