விளையாட்டு

ஈவு இரக்கம் பார்க்க மாட்டேன்: ஹர்திக் பாண்டியா பாய்ச்சல்

ஈவு இரக்கம் பார்க்க மாட்டேன்: ஹர்திக் பாண்டியா பாய்ச்சல்

webteam

களத்தில் இறங்கிவிட்டால் ஈவு இரக்கம் பார்க்காமல் பேட்டிங் செய்வேன் என இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து பேசிய அவர், கிரிக்கெட் மைதானத்தில் நான் இரக்கமற்ற கொடூரமான வீரர். மைதானத்திற்குள் வந்துவிட்டால் என்னுடைய போட்டியில் மட்டுமே கவனம் செலுத்துவேன். ஈவு இரக்கம் பார்க்காமல் அதிரடியாக விளையாடவே விரும்புவேன். என்னுடைய மோதலுக்கு தயாரானால், பின் வங்கமாட்டேன். நான் பந்து வீசும்போது வ்வேறு ஆள். அதேபோல் பேட்டிங் செய்யும்போது மாறுபட்ட ஆள். அதிகமாக என்னை வெளிக்காட்டைக்கொள்வதில்லை. பந்து வீசும்போது சிரிப்பது, மோதலில் ஈடுபடுவது, ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துவது எல்லாமே இயற்கையாக வருவதுதான்’ எனத் தெரிவித்துள்ளார்.