ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா வெற்றி பெற முதல் காரணமாக அமைந்தவர் கொல்கத்தாவின் இளம் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுப்மன் கில்.
34 பந்துகளில் 47 ரன்களை குவித்திருந்தார் கில். இதில் ஐந்து பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.
ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் குட் லெந்தில் ஆப் ஸ்டெம்பை நோக்கி ராஜஸ்தானின் அங்கித் ராஜ்புட் வீசிய பந்தை ஸ்ட்ராய்ட் திசையில் அசால்டாக சிக்ஸருக்கு பறக்கவிட்டிருப்பார் சுப்மன் கில்.
இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் சுனில் கவாஸ்கர் சுப்மன் கில்லை தனது பேவரைட் பேட்ஸ்மேன் என சொல்லியுள்ளார்.
“சுப்மன் கில் அடித்த சிக்ஸரை மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டே இருப்பேன். அவர் ஆடியது அற்புகமான கிரிக்கெட்டிங் ஷாட். கில் எனது பேவரைட் பேட்ஸ்மேன்களில் ஒருவர்” என தெரிவித்துள்ளார் கவாஸ்கர்.