விளையாட்டு

“அவன் சதம் அடிக்காதது ஏமாற்றம்தான்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை!

“அவன் சதம் அடிக்காதது ஏமாற்றம்தான்” - வாஷிங்டன் சுந்தரின் தந்தை!

EllusamyKarthik

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் அறிமுக வீரராக வாஷிங்டன் சுந்தர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காபா டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறார். முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் பவுலராக மூன்று விக்கெட்டுகளும், பேட்ஸ்மேனாக அரை சதமும் விளாசியிருந்தார். இந்நிலையில் அவன் சதம் அடிக்காதது ஏமாற்றம்தான் என  வாஷிங்டன் சுந்தரின் தந்தை எம்.சுந்தர் தெரிவித்துள்ளார். 

“விளையாட எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் பெரிய ஸ்கோர் அடிக்கணும் என அவனிடம் சொல்வது எனது வழக்கம். அவனும் அதை செய்வதாக சொல்லியிருந்தான். ஆனால் அவன் சதம் அடிக்காதது எனக்கு ஏமாற்றம்தான். சிராஜ் கிரீஸுக்கு வந்ததும் அவன் பெரிய ஷாட் அடித்திருக்க வேண்டும். அதை செய்ய கூடிய  திறனும் அவனிடம் உள்ளது. அவன் தொடக்க ஆட்டக்காரனாக விளையாடுவன். ஃபர்ஸ்ட் டிவிஷன் கிரிக்கெட்டில் இளம் வயதில் சதம் விளாசியுள்ளான்” எனத் தெரிவித்துள்ளார் எம்.சுந்தர். 

இரண்டாவது இன்னிங்ஸிலும் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர் வார்னரை LBW முறையில் அவுட் செய்துள்ளார் சுந்தர் என்பது குறிப்பிடத்தக்கது.