விளையாட்டு

” என்னை பாதுகாத்துக் கொள்ள 50 முகக்கவசங்கள் என்னுடன் பயணிக்கும் ”- செரினா வில்லியம்ஸ்

webteam

டென்னிஸ் வீராங்கனையான செரினா வில்லியம்ஸ் கொரோனா பரவலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள, பயணத்தின்போது 50-க்கும் மேற்பட்ட முகக்கவசங்களை பயன்படுத்த இருப்பதாகக் கூறியுள்ளார். 

38 வயதான செரினா வில்லியம்ஸ் 23 முறை கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டத்தை வென்றவர். இவருக்கு இரத்த உறைவு மற்றும் நுரையீரல் பிரச்னை உள்ள நிலையில் கொரோனா பரவலில் இருந்து தன்னை எப்படி காத்துக்கொள்கிறார் என்பது குறித்து அவர் தற்போது பேசியுள்ளார்.

அதில் அவர் கூறும்போது “ நான் தற்போது கொஞ்சம் ஒரு துறவியைப் போலத்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனது நுரையீரல் முழு திறனுடன் செயல்படுவதில் பிரச்னை உள்ளது. அதனால் எனக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது. நான் தற்போது நலமாகத்தான் இருக்கிறேன். .

ஆகஸ்ட் 31 முதல் - செப்டம்பர் 13 வரை நடக்கும் அமெரிக்க டென்னிஸ் போட்டியில் நான் பங்கேற்க இருக்கிறேன். டென்னிஸ் விளையாடுவது மகிழ்ச்சிகரமான விஷயமாக இருந்தாலும், அங்கு செல்வதற்கான பயணத்தை நான் அவ்வளவு சாதரணமாக எடுத்துக் கொள்ளப்போவதில்லை. பயணத்தின்போது என்னைப் பாதுகாத்துக் கொள்ள 50 முகக் கவசங்களை வைத்துள்ளேன். நான் கவனமாக இல்லை. மிக மிக கவனமாக இருக்கிறேன். என்னைச் சுற்றி உள்ளவர்களும் மிக கவனமாக பாதுகாக்கப்படுகிறார்கள். டென்னிஸ் விளையாடுவது ஒரு புறம் இருந்தாலும், எனது உடல்நலனுக்கும், வாழ்விற்கும் மிக முக்கிய பிரதான இடத்தைக் கொடுக்கவே இப்படி இருக்கிறேன். நான் தற்போது இப்படித்தான் இருக்க வேண்டும் என்றார்”