விளையாட்டு

கை கொடுத்தது அதிர்ஷ்டம்: சாஹேல்

கை கொடுத்தது அதிர்ஷ்டம்: சாஹேல்

webteam

கட்டாக்கில் நடந்த போட்டியில் நான்கு விக்கெட் வீழ்த்தியதற்கு அதிர்ஷ்டமும் கை கொடுத்தது என்று இந்திய சுழற்பந்துவீச்சாளர் சேஹல் கூறினார். 

இலங்கைக்கு எதிராக கட்டாக்கில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 20 ஒவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் கே.எல். ராகுல் 48 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். தோனி 22 பந்துகளில் 39 ரன்களும் மணிஷ் பாண்டே 18 பந்துகளில் 32 ரன்களும் ஆட்டமிழக்காமல் எடுத்தார். பின்னர் விளையாடிய இலங்கை அணி 87 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. சேஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்டநாயகன் விருது சேஹலுக்கு வழங்கப்பட்டது.

வெற்றிக்குப் பின் பேசிய சேஹல், ‘இந்தப் போட்டியில் முதலில் பந்து வீசியபோது குழப்பம் ஏற்பட்டது. எப்படி வீசலாம் என நினைத்துக்கொண்டிருந்தபோது, கொஞ்சம் அதிர்ஷ்டமும் கை கொடுத்தது. தாரங்கா விக்கெட்டை எடுத்தபின் எனக்கு அது வொர்க் அவுட் ஆனது. கூக்ளி மற்றும் லெக்ஸ்பின் இரண்டையும் மாறி மாறி வீசினேன். சரியான இடத்தில் பந்த வீசினேன். விக்கெட்டுகள் கிடைத்தது. குல்தீப்பும் சிறப்பாக பந்து வீசினார். அவரது பந்துவீச்சையும் நான் ரசித்தேன். அவர் எனது பந்துவீச்சால் மகிழ்ந்தார். இந்தப் போட்டியில் நான்கு விக்கெட்டுகள் எடுத்தது மகிழ்ச்சி’ என்றார்.