விளையாட்டு

‘சைமண்ட்ஸ் இனவெறி சர்ச்சையில் ஹர்பஜனுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே உணர்ந்தேன்’ கும்ப்ளே

EllusamyKarthik

எப்போதுமே ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா மோதும் கிரிக்கெட் போட்டிகள் என்றாலே வீரர்களின் ஆட்டம் அனல் பறக்கும். சமயங்களில் வீரர்கள் வார்த்தை போரிலும் ஈடுபடுவர். இதில் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கி நிற்கும். 

2008இல் கும்ப்ளே தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடின. நான்கு போட்டிகள் அடங்கிய இந்த தொடரில் சிட்னியில் நடந்த போட்டியின் போது இந்தியாவின் ஹர்பஜன் சிங் மற்றும் ஆஸ்திரேலியாவின் சைமண்ட்ஸ் இடையே ஏற்பட்ட வார்த்தை போர் இனவெறி சர்ச்சையாக வெடித்து. 

இந்நிலையில் தற்போது அது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே.

அஸ்வின் உடனான ஆன்லைன் உரையாடலில் கும்ப்ளே ஹர்பஜனுக்கு அநீதி இழக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். 

“எங்களில் ஒருவர் (ஹர்பஜன் சிங்) இனவெறி சர்ச்சையினால் மூன்று போட்டிகளுக்கு விளையாட அப்போது தடை செய்யப்பட்டார். அந்த அறிவிப்பை எதிர்த்து ஒரு அணியாக நாங்கள் முறையிட்டோம். ஹர்பானுக்கு அந்த விவகாரத்தில் அநீதி இழைக்கப்பட்டதாக நான் உணர்ந்தேன். நாங்கள் எல்லோரும் எங்களது எதிர்ப்பினை பதிவு செய்ய பாதி தொடரிலேயே திரும்பலாம் எனவும் முடிவு செய்தோம்” என தெரிவித்துள்ளார் அவர்.