சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி தோற்றுள்ளதால் ஆசிய கோப்பைப் போட்டியில் அந்த அணிக்குத்தான் அழுத்தம் என்று பாகிஸ்தான் பந்துவீச்சாளர் ஹசன் அலி கூறினார்.
14-வது ஆசியக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடர் வரும் 15 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், ஹாங்காங் அணிகள் பங்கேற்கின்றன. இதில் பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இடம் பெற்றுள்ளார். இவர், இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி தொடர் நாயகன் விருதை வென்றவர். முதல் லீக் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது பாகிஸ்தான்.
Read Also -> ஆசியக் கோப்பை கிரிக்கெட்: தகுதி பெற்றது ஹாங்காங்!
அப்போது, ஒரு விக்கெட்டுக்கு 70 ரன்கள் கொடுத்தார் ஹசன் அலி. ஆனால் இறுதிப்போட்டியில் 19 ரன்கள் கொடுத்து தோனி, அஸ்வின், பும்ரா ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் இந்தியாவை 180 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது பாகிஸ்தான்.
இந்நிலையில் லாகூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறும்போது, ’சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்திய அணி தோற்றுள்ளதால் அந்த அணிதான் அழுத்தத்தில் இருக்கிறது. நாங்கள் சிறப்பான நிலையில் இருக்கிறோம். ஐக்கிய அரபு அமீரகம் கிட்டத்தட்ட எங்கள் நாட்டைப் போன்றது. அதனால் அது எங்களுக்கு சாதகமாகவே இருக்கும். இந்திய அணி சிறந்த அணிதான். இருந்தாலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவ தற்குப் பதிலாக அந்த அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த முயல்வேன். விராத் கோலி சிறந்த வீரர். அவர் மேட்ச் வின்னர் என்பது அனை வருக்கும் தெரியும். அவர் இல்லாதது எங்கள் அணிக்கு சாதகமாக அமையும்.
Read Also -> இன்று கடைசி டெஸ்ட்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி?
அழுத்தமான சூழ்நிலைகளை அவரைப் போல கையாள மற்றவர் களால் முடியாது. அவருக்கு பந்துவீச முடியாதது வருத்தம்தான். எந்த இளம் வீரரும் அவரது விக்கெட்டை வீழ்த்த நினைப்பது சகஜம் தான். இந்த தொடரில் அவர் விளையாட வில்லை என்றால் அடுத்த முறை அவரது விக்கெட்டை வீழ்த்துவேன். நான் கோலியை மட்டும் டார்க்கெட் செய்யவில்லை. இந்திய அணிக்கு எதிராக மட்டுமே நாங்கள் கவனம் செலுத்தவில்லை. ஒட்டுமொத்த அணிகளுக்கு எதிராகவும் கவனம் செலுத்துகிறோம்’ என்றார்.