விளையாட்டு

டாஸ் வென்றது பஞ்சாப் : ஹைதராபாத் முதலில் பேட்டிங்

டாஸ் வென்றது பஞ்சாப் : ஹைதராபாத் முதலில் பேட்டிங்

webteam

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 48வது லீக் போட்டி இன்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. ஹைதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்புடன் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. ஏனென்றால், இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளும் தலா 11 போட்டிகளில் விளையாடி அதில் 5 போட்டிகளை வென்றுள்ளன. எனவே இன்றையப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு அதிகரிக்கும். 

இந்தப் போட்டி இன்னும் சிறிது நேரத்தில் தொடங்கவுள்ள நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டாஸ் வென்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் அஸ்வின் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். ஹைதராபாத் அணியில் அபிஷேக், நபி மற்றும் சந்தீப் ஆகியோர் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.