விளையாட்டு

“பணத்தைவிட மனித உறவுகள் முக்கியம்” - கால்பந்து வீரர் கிலியன் மப்பே

“பணத்தைவிட மனித உறவுகள் முக்கியம்” - கால்பந்து வீரர் கிலியன் மப்பே

EllusamyKarthik

பிரான்ஸ் நாட்டு தேசிய கால்பந்தாட்ட அணி மற்றும் PSG கால்பந்தாட்ட அணியின் பிரதான வீரரான கிலியன் மப்பே விரைவில் வேறு ஒரு கிளப் அணிக்காக விளையாடுவார் என்ற வதந்தி நீண்ட நாட்களாகவே பகிரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் எந்த அணிக்காக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது. அதுகுறித்து அவரது எண்ணம் என்ன என்பதை அவர் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. 

வரும் 2022 ஜூன் மாதத்துடன் மப்பே, PSG அணியுடன் போட்டுள்ள ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் தான் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வரும் ஜனவரி முதல் அவர் புதிய அணிகளுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என்ற நிலை உள்ளது.  

“பணத்தைவிட மனித உறவுகளே பிரதானம். இதனை வாழ்க்கைக்கான பாடம் எனவும் சொல்லலாம். நம்மை சார்ந்துள்ள குடும்பத்திற்கு தேவையான ஆதரவை வழங்க பணம் முக்கியம் என்பதை மறுப்பதற்கு இல்லை. இருந்தாலும் இது அதற்கும் மேலானது. கலாசார ரீதியாக வேறுபட்ட வீரர்களுடன் பயணிக்க ஆர்வமாக உள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார். 

PSG அணி சார்பில் அவர் விளையாட இனி வரும் ஒவ்வொரு சீசனுக்கும் அவருக்கு 50 மில்லியன் யூரோக்கள் தர தயார் என அணி நிர்வாகம் அவரிடம் தெரிவித்துள்ளதாம். இது தவிர போனஸ் தொகை தரவும் தயார் என PSG தெரிவித்துள்ளதாம்.