விளையாட்டு

சிஎஸ்கேவில் அதிரடி மாற்றம்.. சீனியர்ஸ் வெளியே.. ஜூனியர்கள் உள்ளே

EllusamyKarthik

ஷார்ஜாவில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆடும் லெவனில் அதிரடி மாற்றத்தை மேற்கொண்டுள்ளது சென்னை அணி. 

ராஜஸ்தானுடனான கடந்த ஆட்டத்தில் தோல்வி பெற்ற நிலையில் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என தோனி சொல்லியிருந்த நிலையில் இந்த ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெகதீசன் என இரண்டு இளம் வீரர்கள் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

அனுபவ சுழற்பந்து வீச்சாளர் தாஹிரும் இந்த ஆட்டத்தில் விளையாட அணிக்குள் திரும்பியுள்ளார். இந்த மாற்றம் சென்னைக்கு வெற்றி கொடுக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். ஏற்கனவே சென்னை அணியில் சாம் கர்ரன், தீபக் சாஹர் உள்ளிட்ட இளம் வீரர்கள் உள்ளனர். இதனால், சென்னை அணியில் இளம் வீரர்களின் அதிக்கம் அதிகமாக உள்ளது.